×

படு மோசமான விமர்சனங்களை பெற்ற முரட்டுக்குத்து!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகம் தான் இரண்டாம் குத்து. வழக்கமாக இரண்டாம் பாகம் வெளியானால் முதல் பாகத்தை விட மாஸாக இருக்கும் என்று விளம்பரம் செய்வார்கள். 

 

ஆனால் இரண்டாம் குத்து மோசமாக இருக்கிறது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை பார்த்திருந்தீர்கள் என்றால் இரண்டாம் குத்து படத்தில் என்ன இருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்துவிடும்.

முதல் பாகத்தை விட தரம் தாழ்ந்து இருக்கிறது இரண்டாம் பாகம். சந்தோஷ் ஜெயகுமாரும், டேனியல் ஆன் போப்பும் நடிப்பில் ரொம்பவே சுமார். சந்தோஷ் ஜெயகுமாருக்கு முகபாவனைகள் செட்டாகவே இல்லை. இரண்டு ஹீரோயின்களும் கவர்ச்சிக்காக மட்டுமே இருக்கிறார்கள்.

துணை கதாபாத்திரங்களில் நடித்த ரவி மரியா, சாம்ஸ், ராஜேந்திரன் ஆகியோர் மேலும் எரிச்சலூட்டுகிறார்கள். ஜோக் அடிக்கிறேன் என்கிற பெயரில் என்னவோ செய்து வைத்திருக்கிறார்கள்.

கூட்டு பலாத்காரம் மற்றும் த்ரீசம் ஆகியவற்றை ஃபன்னி என்று சொல்வதை பார்த்தாலே கோபம் வருகிறது. படத்தை பார்ப்பவர்களை வாந்தி எடுக்க வைத்துவிடும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. படத்தில் ஒரேயொரு காட்சி தான் பயத்தை அளிக்கிறது. அது என்னவென்றால் மூன்றாம் பாகம் வரப் போகிறது என்று இறுதியில் காட்டுவது தான்.

இரண்டாம் பாகமே கண்ணை கட்டுதே. இரண்டாம் குத்து, படுமோசம்.

From around the web

Trending Videos

Tamilnadu News