×

பாடகியுடன் அனிருத்துக்கு காதலா? - லீக் செய்த பாடகி சுசித்ரா..

 

தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத். குறிப்பாக தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு இவரின் இசை வேற லெவலில் இருக்கும். ரஜினிக்கு பேட்ட படத்தில் இசையமைத்திருந்தார். அதேபோல், கமலின் ‘இந்தியான்2’ திரைப்படத்திற்கும் அனிருத்துதான் இசை.

முரட்டு சிங்கிளாக வலம் வந்த அவருக்கும்,பாடகி ஜோனிட்ட காந்திக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ரேடியோ தொகுப்பாளினி மற்றும் பாடகி சுசித்ரா ரேடியோ நிகழ்ச்சியில் தெரிவித்து கொளுத்திப்போட்டுள்ளார்.

அனிருத்தின் இசை நிகழ்ச்சிகளில் ஜோனிட்டா கலந்த் கொள்வார். டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லமா பாடலை அனிருத்தும், ஜோனிட்டாவும் இணைந்துதான் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News