ஸ்பெயின் நாட்டில் கல்யாணம்... காதலியை கரம் பிடிக்கும் அனிருத்?

 
anirudh

அனிருத் ரவிசந்திரன்: 

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார். முதல் திரைப்படமே அவருக்கு பெரும் புகழும் பெயரும் தேடித் தந்தது .

aniruth

குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் தான் அவருக்கு அடையாள பாடல் ஆக அமைந்தது. தொடர்ச்சியாக அஜித், சூர்யா ,விக்ரம் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .

அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: 

இந்த நிலையில் தற்போது சொல்லப்படும் தகவல் என்னவென்றால்  கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனை அனிருத் ரவிச்சந்திரன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கும் காவியா மாறனுக்கும் டெஸ்டினேசன் வெட்டிங் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

kavya maran

ஆனால் இதை அனிருத்தும் காவ்யாவும் இதுவரை உறுதி செய்யவில்லை. இவர்கள் இருவரும் ரகசியம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாகவும் சென்னையில் திரை நட்சத்திர பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ரிசப்ஷன் நடக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உறுதிப்படுத்தாத இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த விஷயம் அனிருத் மற்றும் காவியாவிற்கு தெரியுமா? என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Tags

From Around the web