Categories: Cinema News latest news

இந்த அனிருத்துக்கு இதே வேலையா போச்சி.! தளபதி விஜயின் இந்த பாட்டும் காப்பியா.! ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அனிருத் இசையில் ஏற்கனவே அரபிக் குத்து எனும் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருப்பார். அனிருத் இசையமைத்து, அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி ஆகியோர் பாடி இருப்பர்.

இதனை தொடர்ந்து இரண்டாவது பாடல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான புரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.

அந்த புரோமோ வீடியோ பாடலை கேட்ட இணையவாசிகள், இந்த பாட்டை எங்கோ கேட்டது போல இருக்கிறது என்று தேட ஆரம்பித்து விட்டனர். பிறகு தான்தெரிந்தது போல, அனிருத் இசையில் ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் பீலா பீலா எனும் பாடலில் இடையில் வரும் இசை போல இந்த பாடல் ப்ரோமோ வீடியோ இசை அமைந்துள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – பாகுபலி இயக்குனரை தட்டி தூக்கிய புஷ்பா.! அப்போ சூப்பர் ஸ்டார் நிலைமை.!?

 

அதனை குறிப்பிட்டு இணையவாசிகள் இந்த பாட்டும் காப்பியா என்பதுபோல இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதேபோல ஏற்கனவே கத்தி படத்தில் வரும் தீம் மியூசிக் வேறு ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என இணையவாசிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

முழுப்பாடலும் வெளியான பின்னர் தான் தெரியும்  இந்த பாடல், எந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டவையா  அல்லது உண்மையில் அனிருத் சொந்தமாக இசை அமைத்து உள்ளாரா என்பது.

Manikandan
Published by
Manikandan