×

விஜய் வீட்டின் ரெய்டுக்கு ’தர்பார்’ படம் தான் காரணமா? அதிர்ச்சித்தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் மதுரை ஏரியாவை பைனான்சியர் அன்புச்செல்வன் குறைந்த விலைக்கு கேட்டதாகவும் ஆனால் லைகா நிறுவனம், தர்பார் படத்தை அவருக்கு தராமல் வேறொருவருக்கு கொடுத்ததாகவும்
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் மதுரை ஏரியாவை பைனான்சியர் அன்புச்செல்வன் குறைந்த விலைக்கு கேட்டதாகவும் ஆனால் லைகா நிறுவனம், தர்பார் படத்தை அவருக்கு தராமல் வேறொருவருக்கு கொடுத்ததாகவும் இந்த கோபம் காரணமாகவே விநியோகஸ்தர்களை அன்புச்செழியன் தூண்டிவிட்டு நஷ்ட ஈடு கேட்க சொன்னதாகவும் ஒரு வதந்தி கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

இதனை அடுத்து தர்பார் படத்திற்கு நஷ்ட ஈடு வேண்டும் என விநியோகிஸ்தர்கள் ரஜினி மற்றும் முருகதாஸ் வீடுகளில் குவிந்ததாகவும், ரஜினிக்கு விநியோகிஸ்தர்கள் மூலம் அன்புச்செழியன் தொல்லை கொடுத்ததால் தான் அவரது வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் கோலிவுட் பிரபலங்கள் சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் பிகில் படத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்க்கு சம்பளமாக ரூ 30 கோடி கொடுத்ததற்கு கணக்கு இருப்பதாகவும் ஆனால் அன்புச்செழியன் மூலம் 20 கோடி ரூபாய் கூடுதலாக விஜய்க்கு ரொக்கமாக பணம் கொடுத்ததாகவும் அந்த பணம் கணக்கில் வராத கருப்புப்பணம் என்றும் ரகசிய தகவல் வந்ததையடுத்தே திரைப்பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் விஜய் வீடுகளில் சோதனை நடந்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன 

இருப்பினும் அன்புச்செல்வன் விஜய்க்கு ரூபாய் 20 கோடி பணம் கொடுத்ததற்கான எந்த விதமான ஆதாரமும் இதுவரை சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இனிமேல் நடத்தப்படும் விசாரணையில் இதுகுறித்து தகவல் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

From around the web

Trending Videos

Tamilnadu News