×

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்...? 25 இடங்கள் ஒதுக்கப்பட்டதா?

தி.மு.க - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு 25 இடங்களை தி.மு.க ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. 
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதோடு, அதன் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தையும் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. 

தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே அதிக கட்சிகள் இருப்பதாகவும், தி.மு.க வலுவாக இல்லாத காரணத்தால் கூட்டணிக்குக் கட்சிகளை தி.மு.க சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தி.மு.க - மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அந்தக் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்,  அ.தி.மு.க வலுவான நிலையில் இருப்பதாக ஒரு உணர்வை மக்கள் நீதி மய்யத்தின் வருகை காட்டுவதாக தி.மு.க மூத்த தலைவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.  

கமல் கட்சிக்கு 25 இடங்கள் என்பது மிகவும் அதிகம் என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கோபடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். 4 வருடங்களாக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி புதிய கட்சிக்கு தி.மு.க அதிக இடங்களை கொடுப்பதாகக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். 6.5% வாக்கு வங்கியை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அக்கட்சியை விட குறைவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படக் கூடாது என பேச்சுக்களும் தொடங்கி இருக்கிறது. மேலும், `தி.மு.க.,  காங்கிரஸ் கட்சியை மக்கள் நீதி மய்யத்துக்கு இணையாகக் கருதக் கூடாது. ஆகவே, காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைப் பெற வேண்டும்’ என்று காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், தி.மு.க கூட்டணியில் மிகப் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கமலின் வருகையால் ஸ்டாலின் முற்றிலுமாக ஒரங்கட்டப்படுவார் என்று தி.மு.கவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரமான தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவை என்பதை ஏற்க மறுக்கின்றனர். இதனால், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகிகள் வருத்தமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News