Connect with us
Suchitra, Dhanush

Cinema News

சுசித்ரா சொல்றது எல்லாம் உண்மையா? தனுஷ் ஏன் மாயமானார்? பிரபலம் சொல்வது என்ன?

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா அவ்வப்போது பகீர் குற்றச்சாட்டுகளை தினமும் எழுப்பி வருகிறார். இதனால் பல நடிகர்கள் கதிகலங்கிப் போய் உள்ளனர். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

சுசித்ரா வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பகீர் ரகம். இதுல அவங்க முழுக்க பொய் சொல்றாங்களா என்றால் இல்லை என்பது தான் எனது அபிமானம். அதுல 60 சதவீதம் உண்மை இருக்கலாம். தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் எந்த அச்சமும் இல்லாமல் சுசித்ரா சொல்லும்போது அதுல வெறி ஒண்ணு தெரியுது. என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டீங்க. இதுக்கு மேல உங்களை விட்டு வச்சா நல்லா இருக்காது என்று பொங்கி எழும் சுசித்ராவை ஒரு சூலாயுதம்னே சொல்லலாம்.

இதையும் படிங்க… இளையராஜா – கங்கை அமரன் பிரிவுக்குப் பின்னாடி இப்படி ஒரு சூப்பர்ஹிட் பாடலா.? கொல மாஸா இருக்கே!..

தனுஷ் மாதிரியான ஆட்கள் எல்லாம் இதைக் காதுலயே வாங்கிக்க கூடாதுன்னு செல்போனை எல்லாம் ஆப் பண்ணிக்கிட்டு தன்னோட வேலையைப் பார்க்கப் போயிட்டாரு. அவரு ‘ராயன்’ படத்தோட ரீரிக்கார்டிங்ல உட்கார்ந்துட்டாரு. அங்கேயே செட்டிலாயிட்டாரு. வெளியில வந்தா தானே பதில் சொல்லணும்..னு உள்ளேயே இருக்காரு.

ஒரு பெரிய நடிகரின் படத்தை பேரரசு இயக்கி வருகிறார். கேரவன்ல இருந்து இறங்கி அவரு வந்தாருன்னா 10 அடி தூரத்துல தள்ளி நின்னு தான் பேசணும். ‘அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. மூடு அவுட் ஆயிடுவாரு’ன்னு யூனிட்ல சொல்லி வச்சிருக்காங்க. அப்போது காமெடி நடிகர் ஜெயமணி பேரரசுவிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.

அப்போது எதிரே அந்த பெரிய நடிகர் கேரவனில் இருந்து வர நேராக பேரரசுவிடம் போய் ‘அவரை யாரு உள்ளே விட்டது. நான் ஷாட் முடிச்சி வரும்போது அவரு இங்க இருக்கக்கூடாது’ன்னு சொல்ல, பேரரசு என்ன செய்றதுன்னு தெரியாம நிக்கிறாரு.

அப்புறம் அந்த நடிகர் போகலன்னு தெரிஞ்சதும் பேரரசுவைக் கேரவனுக்குள்ள வரச் சொல்லி கோபத்துல பேச, திரும்ப அந்த நடிகரை உதவி இயக்குனரை வைத்து வெளிய அனுப்பிடறாரு. அதுக்கு அப்புறம் தான் அந்த நடிகருக்கு நம்மைத் துரத்துனது அந்த பெரிய நடிகர்தான்னு தெரிய திரும்ப ஷாட்டுக்கு அவரு வரும்போது ஓடி வந்து அவருக்கிட்ட கூச்சல் போட்டுக் கத்துறாரு.

இதையும் படிங்க… அம்மு நல்லா கும்முன்னு இருக்கே!.. பட்டனை கழட்டிவிட்டு ரிலாக்ஸ் செய்யும் விஜே பார்வதி…

‘ஏன்யா என் வயித்துல அடிக்கிற?’ன்னு கத்த, திரும்பவும் மூடு அவுட்டாகி கேரவனுக்குள்ள போன அந்தப் பெரிய நடிகர் 1 மணி நேரமா வெளியே வரவே இல்லையாம். அதனால நாம் திரையில பார்க்குற ஹீரோ உண்மையில் இருக்க மாட்டார்கள். அந்த விதத்துல சுசித்ரா சொல்றதுல 60 சதவீதம் உண்மை இருக்கத் தான் செய்யுது என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top