×

கொரோனாவிற்கு தீர்வாகிறதா கல்லச்சாராயம்? ஈரானில் என்ன ஆனாது!

சீனாவிற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகளவு உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் லட்சக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அத்துமீறி வெளியேறினால் கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

ஈரான் நாட்டைப் பொறுத்தவரை 237 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஈரான் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் சாராயம் அருந்தினால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று வதந்திகள் அந்நாட்டில் பரவியுள்ளன. இதை உண்மை என்று நம்பி தடையை மீறி குசெஸ்தான் மற்றும் அல்பார்ஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர்.

உடனே அவர்கள் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு பாடாய் படுத்தி வரும் நிலையில், கள்ளச்சாராய வதந்தி மேலும் சோகத்தை அதிகப்படுத்தி உள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News