×

இந்த வருடம் ஐபிஎல் அவ்ளோதானா ? அலுவலகத்தை இழுத்து மூடிய பிசிசிஐ !

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 வரை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு பின்னரும் நடக்கும் என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை நடந்தாலும் ஆளில்லாத மைதானங்களில் நடக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் பிசிசிஐ க்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் அப்டேட் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகம் மூடப்பட்டுள்ளது. பிசிசிஐ அலுவலகம் உள்ள மகாரஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News