×

பாஜக அண்ணாமலை சந்தித்த சினிமா பிரபலம்… கட்சிக்குள் இழுக்க திட்டமா?

தமிழக பாஜகவின் துணைத்தலைவரான சிங்கம் அண்ணாமலை திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனியை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழக பாஜகவின் துணைத்தலைவரான சிங்கம் அண்ணாமலை திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனியை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களின் டாபிக்காக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, இன்னாள் விவசாயி சிங்கம் அண்ணாமலை எதிர்பார்த்தது போலவே பாஜகவில் இணைந்தார். சேர்ந்தவுடனே அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இப்போது கட்சியை வலுப்படுத்தும் விதமாக பிரபலங்களை கட்சிக்குள் இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சில நாட்களுக்கு முன்னர் அவர் இயக்குனர் சமுத்ரகனியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சமுத்திரக்கணி பாஜகவில் சேரப்போகிறார் என வதந்திகள் பரவின.

ஆனால் இதை சமுத்திரக்கணி முற்றிலுமாக மறுத்துள்ளாராம். இருவருக்கும் இடையிலான சந்திப்பு தனிப்பட்ட நட்புரீதியான சந்திப்பு என அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழக பாஜகவினர் வரிசையாக சினிமா பிரபலங்களுக்கு வலைவீசி வருவதாக  அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News