×

தமிழ்சினிமாவில் பேக்ரவுண்ட் இருந்தால் தான் ஜெயிக்க முடியுமா?

கழுகுப் பார்வை
 
r234

எந்தவித பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் யாரையாவது பிடித்து திரைத்துறையில் நுழைந்தவர்களும் உண்டு. பின்னர் தனது திறமையால் வெற்றி பெற்ற நாயகர்களும் உண்டு. அந்தவரிசையில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன், அஜீத்குமார், விஜய்சேதுபதி; ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். அதேநேரம் தந்தை வழியில் வந்து வாரிசு நடிகரானவர்களும் உண்டு. அவர்களும் தந்தையின் பெயர் கொண்டு சினிமாவிற்குள் நுழைந்தாலும், அவரவர் தனித்திறனால் முன்னேற்றம் கண்டும் வந்துள்ளனர். ஆனால் வாரிசு நடிகர்களை விட தனியாக வந்து சினிமாவில் ஜெயித்தவர்கள் தான் பெரும்புகழ் அடைந்துள்ளனர் என்றே தெரிகிறது. 

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி. இவர் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் நடித்து இருப்பார். நகைச்சுவை நடிகர்களில் பலர் தங்கள் சொந்தக்காலில் தான் முன்னேறி உள்ளனர். நாகேஷ், மனோரமா, விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், தாமு, வையாபுரி, யோகிபாபு இவர்களில் யாருக்கும் பேக்ரவுண்டே இல்லை. இவர்களில் நாகேஷின் மகன் ஆனந்தபாபு தமிழ்சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி. மகள் ராதிகா.

உதாரணத்திற்கு சிவாஜிகணேசனின் மகன் பிரபு நடிகரானார். தற்போது அவரது மகன் விக்ரம் பிரபுவும் நடிகராகி முன்னணி நட்சத்திரமாகி விட்டார். பிரபுவின் அண்ணன் ராம்குமார் தயாரிப்பாளராக உள்ளார். சிவக்குமாரின் மகன்கள்; சூர்யா, கார்த்தி இருவரும் முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் தான் பிரபல நடிகர் விஜய். இன்று இளையதளபதி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

அவரது மகன் சஞ்சய் சினிமாவில் அப்பாவுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட ....பாடலுக்கு நடனமாடி அசத்தியிருப்பார். நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். மகன் கௌதம் கார்த்திக். இவரும் நடிகர் தான். தியாகராஜன் மகன் பிரசாந்த் முன்னணி கதாநாயகர் வரிசையில் இருந்தார். தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ், செல்வராகவன். இதில் தனுஷ் முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம்பிடித்தார். செல்வராகவன் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்தார். செல்வராகவன் சோனியா அகர்வாலை மணமுடித்தார். 

அதேபோல் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் பெரிய லிட்டில் ஸ்டாராகி சிம்பு என்ற பெயரில் தற்போது முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் முரளியின் மகன் அதர்வா, சத்யராஜின் மகன் சிபிராஜ், கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், கே.பாக்கியராஜின் மகன் சாந்தனு, விஜயகாந்தின் மகன் சந்தானராஜ், நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் ஆகியோரும் திரையில் பிரபலமான நட்சத்திரங்களாக உள்ளனர். விஜயகுமாரின் மகன் அருண்விஜய் கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

நடிகைகள் வரிசையில் சாருஹாசன், சந்திரஹாசன் இருவரது தம்பி தான் கமல்ஹாசன். இதில், சாருஹாசன் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர். இவரது மகள் தான் சுஹாசினி. இவரது சித்தப்பா தான் கமல். சுஹாசினியின் கணவர் தான் இயக்குனர் மணிரத்னம். சந்திரஹாசன் தயாரிப்பாளர். கமல்ஹாசன் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முக கலைஞராக உள்ளார். அவரது மகள் சுருதிஹாசன், அக்ஷரா ஆகியோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர். இதில் சுருதிஹாசன் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார். அக்ஷரா இந்தியில் ஷமிதாப் படத்தில் அறிமுகமாகி, தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து வந்தார். தற்போது அக்னிசிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் சவுந்தர்யா. இவர்களில் தனுஷ் ஐஸ்வர்யாவை மணமுடித்தார். அவருக்கு ரஜினிகாந்த் மாமனார் ஆனார். ஐஸ்வர்யா இயக்குனர், நடனமாடுபவர், பின்னணிப்பாடகி. இவர் தான் தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கினார். சவுந்தர்யாவும் வரைகலை வடிவமைப்பாளர். இவர் கோச்சடையான் படத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

தேவிகாவின் மகள் கனகா கதாநாயகியாக நடித்து பிரபலமானார். விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை மணமுடித்தார். இவருக்கு வனிதா, ப்ரீத்;தா, ஸ்ரீதேவி, அனிதா என 4 மகள்கள் உள்ளனர். இதில் முதல் 3 பேர் கதாநாயகியாக நடித்தனர். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் தயாரிப்பாளர்களாக உள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யாவை மணமுடித்து, ரஜினியின் மருமகன் ஆனார். அதேபோல் அக்காலத்தில் அக்கா தங்கை நடிகைகள் பலர் இருந்தனர். லலிதா - பத்மினி - ராகினி அக்கா தங்கைகள் தான். அதேபோல் ராதா - அம்பிகா, நக்மா - ஜோதிகா போன்ற அக்காள் தங்கை நடிகைகளும் படத்தில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தனர். சரத்குமாரின் மகள் வரலட்சுமி பிரபல நடிகையானார்.

ஜெமினிகணேசன் - சாவித்ரி, ரஜினிகாந்த் -லதா, அஜீத் -பேபிஷாலினி, சூர்யா -ஜோதிகா, சீதா- பார்த்திபன், பூர்ணிமா ஜெயராம் - பாக்கியராஜ், உஷா - டி.ராஜேந்தர், பிரசன்னா - சிநேகா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். விஜயகாந்த் - பிரேமலதாவை கரம் பிடித்தார். சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் லவ்வி வருகிறார்கள். 

சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் வணங்காமுடி, ஆர்யா -சாயிஷா ஆகியோர் திருமணமாகி பிரிந்த தம்பதியர்கள் ஆனார்கள்;;. கமல்ஹாசன் வாணி கணபதியையும் அதன்பிறகு அவருடன் உண்டான கருத்து வேறுபாட்டால் பிரிந்து சரிகாவையும் திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு கருத்துவேறுபாட்டால் சரிகாவையும் பிரிந்துள்ளார். அதன்பிறகு கவுதமியுடன் சிலகாலம்; மணமுடிக்காமல் வாழ்ந்து வந்தார். அவரையும் தற்போது பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அதேபோல் நவரச நாயகன் கார்த்திக் 1988ல் வெளியான சோலைக்குயில் படத்தில் நடித்த ராகினியை முதல் திருமணம் செய்;தார். அதன் பிறகு 1992ல் அவரது அக்கா ரதியை மணமுடித்தார். சரத்குமார் முதல் திருமணத்தை 1984ல் சாயாவுடன் முதல் திருமணம் செய்து கொண்டார். 2000ல் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தானது. 2001ல் நடிகை ராதிகாவை மணமுடித்தார். 


பிரகாஷ்ராஜ் முதலில் லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் 2009ல் பரஸ்;பரம்  பிரிந்தனர். பின் பிரகாஷ்;ராஜ் அபியும் நானும் படத்தின் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை 2010ல் மணமுடித்தார். ராதிகா 1985ல் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பின் லண்டனில் உள்ள ரிச்சர்ட்டை மணமுடித்தார். இவர்களும் விவாகரத்தாகி பிரிந்தனர். பின்னர் 2001ல் நடிகர் சரத்குமாரைத் திருமணம் செய்தார். கௌதமி சந்தீப் பாட்டியாவை 1998ல் திருமணம் செய்து கொண்டார். 1999ல் இருவரும் பிரிந்தனர். 2004 முதல் 2016 வரை நடிகர் கமல்ஹாசனை பார்ட்னராக சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு இருவரும் பரஸ்பரம் பிரிந்து கொண்டனர். 
 
சென்னை அடையாறு எம்ஜிஆர் திரைப்படக்கல்லூரியில் படித்து திரைத்துறைக்குள் நுழைந்து பெரிய நடிகரான நடிகர்கள் பலர் உள்ளனர். 

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எம்ஜிஆர் திரைப்படக்கல்லூரியில் தான் படித்தார். சுஹாசினி, ராம்கி, அருண்பாண்டியன், ராம்கி, அருண்பாண்டியன,; சிரஞ்சீவி, மோகன்பாபு, ரகுவரன், ஆபாவணன,; இயக்குனர்; ஆர்.கே.செல்வமணி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் இங்கு படித்து பிரபலமானவர்கள் தான்.

இசையமைப்பாளர்களின் இளையராஜாவும், கங்கை அமரனும் அண்ணன் தம்பிகள். இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவர் ஷங்கர் ராஜாவும் இசை அமைப்பாளர்கள்.  

From around the web

Trending Videos

Tamilnadu News