×

முன்னாள் உலக அழகிக்கு இந்நாள் பிறந்தநாள் அவர் யாரோ? 

Priyanka Chopra birthday special
 
pri1

பிரியங்காசோப்ரா மருத்துவத் தம்பதிகளான அசோக் சோப்ரா மற்றும் மது அகௌரி ஆகியோருக்கு ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் 18.7.1982ல் பிறந்தார். 

பிரியங்கா சோப்ரா இந்திய திரைப்பட நடிகை. இவர் 2002-ல் அப்துல் மஜீத் இயக்கத்தில் தமிழில் விஜயுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சி.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் வெளியான இப்படத்தின் கதையை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எழுதினார்;. இசையை டி.இமான் அமைத்தார். விஜய், பிரியங்கா சோப்ரா உடன் நாசர், ரேவதி, விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ரகங்கள். ஹொற்று பாற்றி, லாலா லோ முடிச்சோம், மாட்டு மாட்டு, தமிழா தமிழா, உள்ளத்தைக் கிள்ளாதே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் உள்ளத்தைக் கிள்ளாதே பாடலை விஜய் உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா தன் சொந்தக்குரலில் பாடி அசத்தியிருப்பார். 

பின்னர் ஹிந்தியில் 2003-ம் ஆண்டு  தி ஹீரோ, லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

pyi9

இவர் 2000-ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற 5வது இந்தியப் பெண்மணி ஆனார். அதே ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா மற்றும் தியா மிஸ்ரா ஆகிய இருவரும் பிரபஞ்ச அழகிகளாகவும், ஆசிய பசுபிக் அழகிகளாகவும் முடிசூட்டப்பட்டனர். அப்போது இந்தியாவிற்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. இவர் திரையுலக வாழ்க்கைக்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். இவர் திரைப்படங்களில் நடிகையாகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரியும் பன்முகக் கலைஞர்.

திரைப்படங்கள் மூலம் பிரபலமான இவர் தன் நடிப்பிற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருதுகளைப் பெற்றார். 2016-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவப்படுத்தியது. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் உலகளவில் 100 மிக முக்கிய செல்வாக்கு உடைய மக்களுள் இவரும் தேர்ந்தேடுக்கப்பட்டார். பின்னர் போர்ப்ஸ் என்ற அமெரிக்கா பத்திரிகை இதழ் ஒன்றில் நடத்தப்பட்ட உலகளவில் 100 முக்கிய சக்திவாய்ந்த பெண்கள் என்ற தேர்வில் இவரும் தேர்ந்தேடுக்கப்பட்டார்.

பிரியங்கா சோப்ரா (2003)-ம் ஆண்டு தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற ஹிந்தி திரைப்படத்தில் தொடங்கி ஹிந்தியில் அதே ஆண்டு ராஜ் கன்வாரின் "ஆண்டாஸ்" படத்தில் நடித்ததன் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். இப்படத்திற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

fas

2004ல் அப்பாஸ் முஸ்தானின் ஐத்ராஸ் படத்தில் நடித்து சிறந்த வில்லி நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். 2004ல் முஜ்சே ஷாதி கரோகி, 2006ல் க்ரிஷ் மற்றும் டான் தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன், 2008ல் பேஷன் படத்தில் நடித்து தனது அபார திறமையை வெளிக்காட்டினார். பேஷன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.  

இவர் 2018-ம் ஆண்டு நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் புரிந்தார்.

பிரியங்கா சோப்ராவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News