×

ஒரு வருடம் சம்பாதிக்க போனது குத்தமா? மனைவி வீட்டுக்கு வராததால் கணவன் தற்கொலை!

திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் திரும்பி வந்த அழைத்த போது மனைவி வீட்டுக்கு வராததால் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் திரும்பி வந்த அழைத்த போது மனைவி வீட்டுக்கு வராததால் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் என்ற இளைஞர் அரேபியாவில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ஊருக்கு வந்த அவருக்கு ஜெயபிரியா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் முடிந்த கையோடு கோபிநாத் சவுதிக்கே திரும்பவும் வேலைக்கு சென்றுள்ளார். அதனால் ஜெயப்பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கே சென்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் ஓராண்டு கழித்து தேனிக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து மனைவியை அழைத்துச் செல்ல அவர் வீட்டுக்கு செல்ல மனைவியும் அவரது குடும்பத்தினரும் அவரை செல்ல விடாமல் கோபிநாத்தை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் வீட்டுக்கு வந்து யாருமில்லாத போது அறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக தகவல் அறிந்த போலிசார் அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது அறையில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் எடுத்துள்ளனர். அதில் தன் சாவுக்கு காரணமான ஏழு பேரும் தண்டிக்கப்பட்ட பிறகே தனது சடலத்தை எரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News