Categories: Cinema News latest news

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு வெடித்த காதல் பிரச்சனை! விவாகரத்துக்கு தயாரான ஜெயம் ரவி..

Actor Jeyam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சார்மிங் ஹீரோவாக பெண்களுக்கு பிடித்த ஒரு ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தன் அண்ணன் மோகன் ராஜாவால் அறிமுகமானார் ஜெயம் ரவி. முதல் படமே பெரிய அளவில் வெற்றிப் பெற்றது.அந்தப் படத்தில் இருந்தே அவருக்கு என ஒரு தனி க்ரேஸ் இருந்து வந்தது.

ஜெயம் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஒரே நடிகர் ஜெயம் ரவி என்ற பெருமையையும் பெற்றார். அதனாலேயே தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் ஜெயம் ரவி. ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் அப்பாவாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: அஜித் அரசியலுக்கு வருவார்னு ஜாதகத்திலேயே இருக்கு!.. புள்ளி விபரம் சொல்லும் இயக்குனர்…

அதில் டிக் டிக் டிக் படத்தில் தன் மகனையும் நடிக்க வைத்தார். ஒரு மரியாதையான குடும்பமாக கோலிவுட்டில் ஜெயம் ரவியின் குடும்பம் திகழ்ந்து வந்தது. சூர்யா-ஜோதிகா, அஜித்- ஷாலினி போன்றவர்களை போல ஒரு க்யூட் கப்பிலாகவே ஜெயம் ரவியும் ஆர்த்தியும் வலம் வந்தனர். ஆனால் திடீரென ஜெயம் ரவி விவாகரத்து செய்ய போவதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அதுவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஒரு ஹீரோயினால்தான் இந்த பிரச்சினையே ஆரம்பமானது என்றும் அதனாலேயே ஜெயம் ரவி விவாகரத்து கோரியிருக்கிறார் என்றும் இந்த தகவலை பகிர்ந்த பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் கூறியிருக்கிறார். மேலும் ஆர்த்திக்கு ஜெயம் ரவியை விட்டுத்தர மனமே இல்லையாம். ஜெயம் ரவி தரப்பில் இருந்துதான் இந்த விவாகரத்து பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: இமேஜைத் தேடி போற ஆளு கேப்டன் அல்ல… அப்படி போயிருந்தா இப்படி எல்லாம் செய்வாரா..?

இருந்தாலும் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பிரியக் கூடாது. மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் ஒன்றுசேர வேண்டும் என சபீதா ஜோசப் கூறினார். ஆனால் இந்த தகவல் உண்மையிலேயே கொழுந்து விட்டு எரிகிறது. அதனால் சீக்கிரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் சபீதா கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini