×

காஜல் அகர்வால் கணவர் மிகப்பெரும் பணக்காரரா... சகோதரியின் பதில்

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் கிச்சுலு மிகப்பெரும் பணக்காரரா என்ற கேள்விக்கு அவரது சகோதரி நிஷா அகர்வால் பதிலளித்திருக்கிறார். 
 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், லாக்டவுன் காலத்தில் கௌதம் கிச்சுலு என்பவரைக் கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரியஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது. இதுதவிர சில படங்களிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கணவர் கௌதமுடன் மாலத்தீவுக்கு வெக்கேஷன் சென்றிருந்த காஜல் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகின. 


இந்தநிலையில், கௌதம் குறித்த கேள்விக்கு காஜலின் சகோதரி நிஷா பதிலளித்திருக்கிறார். காஜல் திருமணம் செய்துள்ள கௌதம் கிச்சுலு பெரிய தொழிலதிபரா அல்லது மிகப்பெரும் பணக்காரரா என ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினார். அதற்கு, ``ஒவ்வொரு வகையில் எல்லோரும் நல்ல மனது மற்றும் அறிவு ஆகியவற்றில் மிகப்பெரிய பணக்காரர்களே’’ என சகோதரியின் கணவரை விட்டுக்கொடுக்காமல் நிஷா பதில் கொடுத்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News