Categories: Cinema News latest news

செம காம்பினேஷன்!.. கலகலப்பாக தயாராகுகிறது கரகாட்டக்காரன் 2?.. அட ஹீரோ யாருனு தெரியுமா?..

நடிகர் ராமராஜனுக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் ‘கரகாட்டக்காரன்’. இந்தப் படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது. ராமராஜனுக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். மேலும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்ததே கவுண்டமணி, செந்தில் காமெடி தான்.

ramarajan

அதையும் தாண்டி இசைஞானியின் கிராமிய இசையில் படம் மேலும் புத்துயிர் பெற்றது. அந்தக் காலத்தில் சிவாஜி – பத்மினியை வைத்து எப்படி தில்லானா மோகனாம்மாள் படம் பெரிய அளவில் பேசப்பட்டதோ அதே போல 80களில் கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

கரகாட்டம் என்றாலே முகம் சுழிக்க வைக்கிற நடனம் என்று தவறாக எண்ணியிருந்த மக்களிடத்தில் கரகாட்டத்தின் மதிப்பையும் பெருமையையும் கொண்டு சென்ற படமாக கரகாட்டக்காரன் படம் அமைந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் கங்கை அமரன்.

goundamani senthil

கிராமத்து மண்வாசனை மிக்க இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற கேள்வி பல பேருக்கு எழுந்தது. ஏன் ராமராஜனிடம் கூட இதைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமராஜன் அந்தப் படத்தை மீண்டும் தொடாமல் இருப்பதே மிகவும் நல்லது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று துபாயில் சாந்தனு நடித்த ‘ராவண கோட்டம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவிற்கு வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா போன்ற திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

venkat prabhu mirchy siva

அப்போது வெங்கட் பிரபு கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக கூறியிருந்தார். இசைக்கு யுவன் சங்கர் ராஜாவை அணுகுவார் என்று தெரிகிறது. ஆனால் இதற்கெல்லாம் ஹைலைட்டாக அமைந்தது கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க மிர்ச்சி சிவாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க :ஆ ஊன்னா வடிவேலுவையே நோண்டிட்டு இருக்கக்கூடாது-பேட்டிக்கு நடுவே டென்ஷன் ஆன பிரபல காமெடி நடிகர்…

Published by
Rohini