தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் கீர்த்தி இன்று அவரது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சாணிக்காயிதம் படம் அவரது கெரியரில் மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : ஜெயலலிதா ஒரு விஷம்!..ஜாக்கிரதையாக இரு!..எம்.ஜி.ஆர் எச்சரித்த அந்த நபர் யாருனு தெரியுமா?..
இவரது நடிப்பில் வெளிவந்த மகாநடி படம் அப்படியே நடிகையர் திலகம் சாவித்திரியை நம் கண்முன் சித்தரித்தது. சாவித்ரி போன்ற முக அமைப்பு, சிரிப்பு, உடை, நலினம், நடிப்பு என அனைத்தையும் மறுஜென்மம் எடுத்தாற்போல அருமையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இதனால் பல இயக்குனர்கள் எந்த ஒரு பயோபிக் எடுத்தாலும் அவர்களுக்கு கண்முன் இருப்பவர் கீர்த்தியாக தான் தோன்றுவார். அந்த அளவுக்கு மகாநடி படத்தில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக் படமாக தயாரிக்க இருக்கிறார்களாம். அந்த படத்தில் சுப்புலட்சுமியாக கீர்த்தியை நடிக்க வைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி கால அவகாசம் கேட்ட நிலையில் கீர்த்தி தான் நடிக்க வேண்டும் என்ற உறுதியில் படக்குழு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…