சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பிஸியாக சுற்றிக்கொண்டு இருக்கும் முன்னனி நடிகை குஷ்பு. இவர் தற்போது மிகவும் ஸ்லிம்மாக புதுமுக நாயகி மாதிரியான தோற்றத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் அண்ணாத்த. அதன் பிறகு படங்களில் அவரை காணமுடியவில்லை, மேலும் விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தில் பிரபுவுடன் மீண்டும் ஜோடி சேரும் குஷ்பு என்றெல்லாம் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின.
இதையும் படிங்கள் : என் பொண்ணு அவர் கூடலாம் நடிக்காதுங்க… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்
இதை நிரூபிக்கும் வகையில் அவரிடமே இதை பற்றி கேட்டபோது நீங்கள் வாரிசு படத்தில் நடிக்கிறீர்களா என கேட்க, அதற்கு குஷ்பு வாரிசு படத்தில் நானா? என்று நிரூபர்களையே திருப்பி கேள்வி கேட்டார். மேலும் அது சம்பந்தமான புகைப்படங்கள் வெளிவந்தன. அதற்கு என்ன சொல்கிறீர்கள் என கேட்க,
இதையும் படிங்கள்: அவமானப்படுத்திய நதியா… ஷோபனாவை வைத்து பழிவாங்கிய கேப்டன்…? என்னப்பா சொல்றீங்க?
ஏங்க நான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன், பக்கத்தில் தான் வாரிசு படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது. எனக்கு படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் சரத், பிரபு இவர்களுடன் போய் உட்கார்ந்து படப்பிடிப்பை பார்ப்பேன். சும்மா போய் உட்கார்ந்தது ஏன் இப்படி பண்றீங்க என கேட்டார். மேலும் நிரூபர்கள் அப்படி என்றால் வாரிசு படத்தில் நீங்கள் இல்லையா என மறுபடியும் கேட்க அது எப்படி என்னால சொல்லமுடியும் ? என நிரூபர்களை குழப்பி விட்டார் நடிகை குஷ்பு.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…