×

கருணாஸுக்கு ஜோடியாக லஷ்மி மேனன்… உருவாகிறதா திண்டுக்கல் சாரதி 2?

நடிகை லஷ்மி மேனன் கருணாஸூக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் கதாநாயகியாக வதந்தி ஒன்று இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

 

நடிகை லஷ்மி மேனன் கருணாஸூக்கு ஜோடியாக திண்டுக்கல் சாரதி 2 படத்தில் கதாநாயகியாக வதந்தி ஒன்று இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கருணாஸ் 10 ஆண்டுகளுக்கு  முன்னர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் திண்டுக்கல் சாரதி. அந்த படத்தில் அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சதா சர்வ காலமும் அவரை பற்றிய சந்தேகப் பார்வையோடு நடந்துகொள்ளும் தாழ்வு மனைப்பான்மையுடைய நபராக நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க உள்ளதாம், இந்த பாகத்தில் கருனாஸுக்கு ஜோடியாக நடிகை லஷ்மி மேனன் நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

இதற்கெல்லாம் காரணம் படப்பிடிப்பு தளத்தில் லஷ்மி மேனனும் கருணாஸும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியானதுதான். ஆனால் அந்த புகைப்படம் கொம்பன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் லஷ்மி மேனன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News