Connect with us
suchitra nayanthara

Cinema News

சுசித்ராவை இயக்குவது நயன்தாராவா? தனுஷின் நடவடிக்கையில தான் இனி எல்லாமே இருக்கு!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியின் காதல் ஓரளவு வெளிப்பட்டு இருக்கு. முக்கியமா விக்னேஷ் சிவன் மாதிரியான மென்மையான நபரால தான் அவரைக் கையாள முடியும். முக்கியமா கொசு அடிக்கிற காட்சி அந்த ஆவணப்படத்துல பார்த்திருப்பீங்க. ஒருநாளைக்கு அஞ்சாறு முறை கொசு அடிப்பாங்கன்னு நினைக்கிறேன் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க…

நாகூர் பிரியாணி

Also read: பாகுபலி மாதிரி இருக்கு கங்குவா… உலகத்தரம்யா… இயக்குனர் வைத்த வேண்டுகோள் செமயா இருக்கே!

அப்படித்தான் அந்தக காட்சி இருக்கு. எல்லாவற்றுக்கும் ரொம்ப கோபப்படுற பெண்ணா இருப்பாங்க. அதைத்தான் விக்னேஷ் சிவன் பூசியும், பூசாமலும் நடிக்கிறார். ஒரு மீம்ஸ் ஒண்ணு வந்துச்சுன்னு அவர் சொன்னாரு. ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குத் தான் கிடைக்கணும்னா அதை யாரால மாத்த முடியும்’னு சந்தானம் ஒரு படத்துல டயலாக் சொல்வாரு.

பஸ் கண்டக்டர் சூப்பர்ஸ்டார்

அதைத் தூக்கி அப்படியே போட்டு நயன்தாரா விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகிட்டதா பலபேரு கிண்டல் பண்ணினாங்க. ஆனா அதை ரொம்ப ஸ்போர்ட்டிவ்வா அவரு எடுத்துக்கிட்டாரு. ஒரு பஸ் கண்டக்டர் சூப்பர்ஸ்டாரா மாறும்போது ஏன் இது நடக்கக்கூடாதுங்கறது தான் அவரோட அழுத்தமான கேள்வியா இருந்துச்சு.

பெண் நம்பிட்டா….

ஒரு பெண் ஒரு ஆணை நம்பிட்டான்னா அவன் எப்பேர்ப்பட்டவனா இருந்தாலும் பரவாயில்லை. அவன் பேக்ரவுண்டு என்ன? ஏழையா, பணக்காரனா? அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. அதுதான் காதல். இந்தப் படத்துல அதை எல்லாம் அழகா சொல்லணும். ஆனா ரொம்ப ராவா சொல்லி போரடிச்சிட்டாங்க.

சீதா கேரக்டரில் நயன்தாரா

dhanush

dhanush

ஆனா கங்குவாவுக்கும், இந்த டாக்குமெண்ட்ரிக்கும் தான் போட்டிங்கற அளவுக்கு வந்துடுச்சு. கொலையுதிர் காலம் படத்தின் ஆடியோ லாஞ்சில் ராதாரவி பேசியது சர்ச்சையானது. நயன்தாராவைப் பார்த்து சீதா கேரக்டரில் எல்லாம் நடிச்சிருக்காங்கன்னு சொன்னார். அப்புறம் பேசுனது தான் சர்ச்சையாக வெடித்தது.

கூப்பிடுற மாதிரியா

முன்பெல்லாம் பக்திப்படங்களில் நடிக்க கே.ஆர்.விஜயாவைக் கூப்பிடுவாங்க. கும்பிடற மாதிரியானவங்களைத் தான் பக்திப்படங்களில் நடிக்க வைக்கணும். கூப்பிடுற மாதிரியா இருக்குறவங்களை பக்திப்படங்களில் நடிக்க வைக்கக்கூடாதுன்னு ராதாரவி சொன்னாராம். அதனால அவரை அன்னைக்கு கட்சியில இருந்தே தூக்குற அளவுக்கு பிரச்சனை போய்விட்டது.

சுசித்ராவை இயக்குவது

Also read: சன் டிவியின் டாப் 5 டிஆர்பி சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்… என்ன நடக்கும் தெரியுமா?

திருமணத்துக்குப் பிறகு நடிக்கக்கூடாதுன்னு ஆர்டர் போட்டாராம் பிரபுதேவா. அதுக்கு அப்புறம் அதுவும் நடக்கலை. அதே மாதிரி தனுஷால 150 பெண்கள் பாதிக்கப்பட்டுருக்காங்கன்னு சுசித்ரா பேசியிருக்காங்க. சுசித்ராவை இயக்குவது நயன்தாராவான்னு ஒரு கேள்வி எழுகிறது. மேலும் பிரச்சனை வெடிக்காமல் இருப்பது தனுஷின் நடவடிக்கையைப் பொருத்து இருக்கு என்கிறார் அந்தனன்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top