×

கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாகும் நயன்தாரா... அண்ணாத்த படத்தின் கதை இது தான்?

ரஜினி தர்பார் படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகிய நாயகிகளோடு பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் சதீஷ் போன்றவர்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்பு வேலைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தற்ப்போது அண்ணாத்த படத்தின் கதை இது தான் என கூறி கதை ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, "ரஜினியின் உறவுக்கார பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இரண்டு பேரின் மனதையும் புண்புடுத்தக் கூடாது என்று ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.

ஆக, படம் முழுக்க உறவுகளையும் அதனால் ஏற்படும் மனக்கசப்பு,  மகிழ்ச்சி என கமர்சியல் படமாக உருவக்காட்டுள்ளதாக கூறி சமூகவலைத்தங்களில் தீயாக பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரிவில்லை. ஆனால், பெரும்பாலும் சிவா இயக்கும் படத்தின் கதைகள் இது போன்ற சாயலில் தான் இருக்கும் அத்துடன் ரஜினிக்கும் இதுபோன்ற குடும்ப உறவு செண்டிமெண்ட் படம் ஹிட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News