நிஞ்சா படத்திலிருந்து Finally பாரத் விலகிட்டாரா?

 
Ninja Bhaarath

'Finally' யூடியூப் சேனல் புகழ் பாரத் ஹீரோவாக தன் கைவசம் 'மிஸ்டர் பாரத், காவியக் காதல், நிஞ்சா' என மூன்று படங்களை வைத்திருந்தார்.

இதில் 'மிஸ்டர் பாரத்' படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 'காவியக் காதல்' படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கி வருகிறார்.

'நிஞ்சா' படத்துக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு பூஜை போட்டனர். இந்த படத்தை இயக்குநர் முருகு இயக்கவிருந்தார், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக கமிட்டாகியிருந்தார்.

Ninja

இதில் பாரத்துக்கு ஜோடியாக பிராத்தனா நாதன் நடிக்கவிருந்தார். தற்போது, இதன் தயாரிப்பு நிறுவனமான 'Soldiers Factory' எக்ஸ் தளத்தில் "இந்த படம் வேறு புதிய நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை வைத்து விரைவில் துவங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளனர்.

From Around the web