இந்த காரணத்தால் ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
Aug 17, 2026, 19:55 IST
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்திற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய அனைத்து தரப்பு ரசிகர்களையும் குஷி படுத்த 75 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் 'ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்' என 3 படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதில் 'ஜெயிலர் 2'-வின் ஷூட்டிங் ஆல்ரெடி ஓவர்.
நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக கடந்த ஜூலை மாதமே அறிவித்திருந்தது இதன் தயாரிப்பு நிறுவனமான 'சன் பிக்சர்ஸ்'.
தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைய இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் என்பதால், ரிலீஸை நவம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.