Categories: Cinema News latest news

விஜயகாந்தை மட்டுமா அடிச்சிருக்கேன்?..தனக்குத்தானே மார் தட்டிக்கொண்ட சினிமா பிரபலம்!..

தமிழ் சினிமாவில் 80, 90களில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் மிகுந்த இடர்பாடுகளை சந்தித்த விஜயகாந்த் மிகவும் போராடி இன்றைக்கு கேப்டனாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் விஜயகாந்த்.

இவர் நடித்த பெருமபாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும். மேலும் இவரின் படத்தில் உச்ச காட்சிகளே சண்டை காட்சிகள் தான். அந்த காலத்தில் சண்டை காட்சிக்காக எப்படி எம்ஜிஆர் படத்தை பார்க்க மக்கள் ஆவலுடன் சென்றார்களோ

இதையும் படிங்கள் :எனக்காக அத எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துருக்காரு விஜய்!…தந்தையின் உருக்கமான பேச்சு!..

அவருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அப்படி ஒரு கூட்டத்தை விஜயகாந்த் படத்தில் தான் பார்க்க முடிந்தது. இப்படி பேரும் புகழும் கொண்ட விஜயகாந்தை அடித்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் மழுப்பலாக கூறியுள்ளார். நீங்கள் விஜயகாந்தை ஏன் அடித்தீர்கள் என ஒரு பத்திரிக்கையாளர் கேட்க

இதையும் படிங்கள் : வாரிசு படத்துல நானா?..சும்மா போய் உட்கார்ந்தது குத்தமா?.. பத்திரிக்கையாளர்களை வெளுத்து வாங்கிய குஷ்பு!.

அந்த காலத்தில் குரு சிஷ்யர்களாக இருந்த இயக்குனர் துணை இயக்குனர்கள் எல்லாம் எவ்ளவு மரியாதையாக இருப்பார்கள் தெரியுமா? மேலும் துணை இயக்குனர்கள் தப்பு பண்ணினால் இயக்குனர்கள் கண்டிப்பார்கள். அதை எல்லாம் ஒரு பொருட்டா பார்க்க மாட்டார்கள். என சொல்ல சரி விஜயகாந்தை ஏன் அடிச்சீங்க என மீண்டும் கேட்க அதற்கு அவர் ஏன் விஜயகாந்தை மட்டும் கேட்குறீர்கள்? பொதுவாக கேளுங்கள் என கூறிவிட்டு நான் அவரை கண்டித்திருக்கிறேன், ஆனால் அடித்த நியாபகம் எனக்கு இல்லை எனக் கூறினார் சந்திரசேகர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini