Categories: Cinema News latest news

இந்தியன் – 2 வில் சத்யராஜ்?..சம்பளத்தை கேட்டு கதி கலங்கிபோன ஷங்கர்!..என்ன கதாபாத்திரம் தெரியுமா?..

கமல் நடிப்பில் இந்தியன் – 2 இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை பற்றி அறிவிப்பு முதலில் வெளியாகும் போதே நடிகர் சத்யராஜ் படத்தில் இருக்கிறாரா என்ற பேச்சு அடிப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் மறுபடியும் சத்யராஜ் பற்றிய செய்திகள் அடிப்பட்டு கொண்டே இருக்கின்றன.

இதை தெளிவு படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆனால் சத்யராஜ் பதிலோ அவர்களை கதி கலங்க வைத்திருக்கிறது. வெறும் 12 நாள்களே கால்ஷீட் என சத்யராஜிடம் சொல்லியிருக்கின்றனர்.

இதையும் படிங்க : தேங்காய் சீனிவாசனுடன் படத்தில் மெய்மறந்து நடித்த நடிகை….அட…இது தான் காரணமா..?!

அதற்கு சத்யராஜ் ஒரு நாளைக்கு ஒரு கோடி வீதம் 12 நாள்களுக்கு 12 கோடி என சம்பளம் பேசியிருக்கிறார். ஏன் இவ்ளவு என கேட்டால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. படத்தின் படி வில்லன் கதாபாத்திரத்திற்கு தான் சத்யராஜை அணுகியிருக்கின்றனர். ஆனால் அந்த வில்லன் ரோலும் இதுவரை யாரும் பண்ணாத கொடூரமான கதாபாத்திரமாம்.

இதை குறிப்பிட்டு சொன்ன சத்யராஜ் இந்த பாத்திரத்தில் நடித்ததன் பின்னாடி இனி யாரும் என்னை குணச்சித்திர வேடங்களில் நடிக்க தயங்குவார்கள் அப்படியே என்னை நடிக்க கூப்பிட்டாலும் இதே மாதிரியான ரோலுக்கு தான் அழைப்பார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக கோடிகளில் அள்ளிக் கொடுங்கள், நடிக்க தயார் என சொன்னாராம் சத்யராஜ். அவ்வளவுதான் இதை கேட்ட ஷங்கர் ஆடிப்போயிருக்கிறாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini