×

காதலியை பிரிந்ததற்கு ஷெரின் காரணமா? - தர்ஷன் பரபரப்பு விளக்கம்
 

பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 

ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது, ஷெரின் பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் இருந்த போது நடிகை ஷெரின் அவருடன் நெருக்கமாக பழகினார். இது தொடர்பாக வனிதா விஜயகுமாரும் ஷெரினுடன் அடிக்கடி சண்டையும் போட்டார். ஆனால், தனக்கு காதலி இருப்பதாக அவரிடம் தர்ஷன் கூறினார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் எனக்கும், சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை கூறிவிட்டேன். எனவே, இனிமேல் உன்னிடம் நான் நட்பாக கூட பேசவில்லை எனக்கூறிவிட்டார். ஆனால், ஷெரினால் தான் எங்கள் காதல் முறிந்துவிட்டதாக சனம் ஷெட்டி ஒரு பேட்டியில் கூரினார். ஆனால், அவருக்கு புரியவைக்க முயற்சி செய்தேன். சனம் ஷெட்டியின் வற்புறுத்தல்படியே ஷெரினை  இன்ஸ்டாகிராமில் அன் ஃபாலோ செய்தேன். எங்கள் இருவருக்குமிடையே பிரச்னை உள்ளது என்று தெரிந்தது முதல் ஷெரினும் என்னிடம் பேசுவதில்லை’ என அவர் தர்ஷன் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News