">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஸ்ருதிஹாசன் இவரைத்தான் டேட் செய்கிறாரா… போட்டோவால் வெளியான தகவல்
நடிகை ஸ்ருதி ஹாசன் டெல்லியைச் சேர்ந்த டூடுள் ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகா என்பவரை டேட் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஸ்ருதி ஹாசன், நடிப்பு மட்டுமல்லாது இசையமைப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவர். தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கும் லாபம் படத்தின் ரிலீஸுக்காக ஸ்ருதி காத்திருக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் இவர் இணைந்து நடித்த `கிராக்’ படம் தியேட்டர்களில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்திருக்கிறது.
Happy birthday princess ❤️❤️❤️❤️ pic.twitter.com/MjYCOY0d6V
— Santanu hazarika (@suprsanta) January 28, 2021
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, தனது 35வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இவரது வீட்டில் நடந்த பார்ட்டியில் மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தநிலையில், டெல்லியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவர் `Happy Birthday Princess’என்ற கேப்ஷனுடன் லவ் எமோஜிக்களுடன் சோசியல் மீடியாவில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே பிரேக் அப்பான ஸ்ருதி, தற்போது இவரை டேட் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த சாந்தனு டூடுள் ஆர்டிஸ்ட் ஆவார். கடந்த 2014-ல் நடந்த சர்வதேச டூடுள் டிசைனிங் போட்டியில் முதல் பரிசை வென்றும் சாந்தனு அசத்தியிருக்கிறார்.
Santanu Hazarika wishes birthday to her girlfriend Shruti Hassan with this beautiful picture #happybirthdayshrutihaasan ♥️#instantcelebrities #HBDShrutiHaasan #HappyBirthdayShrutiHaasan #ShrutiHaasan #Shruthihaasan #BirthdayWishes pic.twitter.com/1lHhfIMsEO
— Instant Celebrities (@InstantCelebri) January 28, 2021