Categories: Cinema News latest news

பொன்னியின் செல்வனுக்கு பிறகு மணிரத்னத்தின் மாஸ்டர் பிளான்.!

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தற்பொழுது பிரம்மாண்டமான பொருட்செலவில் தனது கனவு படமாகிய பொன்னியின் செல்வன் எனும் படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஆர்.சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான முதல் பாகம் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இது வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்கான இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் வேறு ஒரு கதை களத்தில், பின்னணிப் பாடகர் ஆகிய சித் ஶ்ரீராம் அவர்களை கதாநாயகனாக வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனது மெல்லிசை குரலின் மூலம் ரசிகர்களை கிரங்கடித்த சித் ஸ்ரீராம் அடுத்ததாக நாயகனாக களமிறங்கி ரசிகர்களை கவர சிறந்த இயக்குனர் மணிரத்னத்துடன் களமிறங்க உள்ளார்.

Manikandan
Published by
Manikandan