simbu
இன்றைக்கு இணையத்தை திறந்தாலே முதல் வீடியோவாக இருப்பது வாரிசு பட பாடலான தீ தளபதி பாடல் தான். அது விஜய்க்காக எழுதிய பாடலாக இருந்தாலும் இந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் சிம்பு.
ajith
நிறைய படங்களுக்கு சிம்பு பாடியிருந்தாலும் வாரிசு படத்தில் பாடியதில் அப்படி என்ன ஆச்சரியம் என்ற கேள்விகள் இருக்கலாம். சிம்பு இன்றைய சூழலில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். அப்படி இருக்க அவரே இந்த பாடலை பாடி நடிக்கவும் செய்திருக்கிறார். அது தான் விஷயமே.
ஒரு முழு தல வெறியனாக இருக்கும் சிம்பு விஜய்க்காக எப்படி இந்த அளவுக்கு இறங்கினார் என்று தான் சந்தேகம். மறுபக்கம் விஜய் ரசிகர்கள் அனைவரும் இப்பொழுது சிம்புவை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சொல்லப்போனால் விஜய் ரசிகர்கள் சிம்பு ரசிகர்களாகவே மாறிவிட்டார்கள்.
simbu
ஆனால் இதன் பின்னாடி இருக்கும் காரணம் என்ன என்பதை மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். சிம்புவின் நடிப்பில் வெளிவந்த வாலு படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தை தயாரித்தது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இந்த நிறுவனம் அஜித்தை வைத்து ஏகப்பட்ட படங்களை தயாரித்திருக்கிறது. வாலு படம் ரிலீஸ் சமயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திந்தாராம் சிம்பு. பைனான்ஸ் பிரச்சினையுன் இருந்திருக்கிறது.
இதையும் படிங்க : ‘துணிவு’ படத்தை பற்றி வரும் எந்த செய்தியையும் நம்பாதீங்க!.. மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்த எச்.வினோத்!..
ஏற்கெனவே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் அஜித்தும் நகமும் சதையும் போல நெருக்கமானவர்களாம். ஆனால் அவர்களுக்குள் இருந்த ஏதோ பிரச்சினைகளால் இருவரும் நண்பரகளாகவே பிரிந்து விட்டார்களாம். இது ஒரு புறம் இருக்க வாலு பட பிரச்சினைக்காக சிம்பு அஜித்தை போய் சந்தித்திருக்கிறார். ஆனால் அஜித் நான் சக்கரவர்த்தியுடன் பேசுவதில்லை. இப்படி இருக்க என்னால் அவரிடம் மீண்டும் போய் எப்படி நிற்க முடியும் என்று கூறி விட்டாராம்.
simbu
ஆனால் இந்த பிரச்சினையை அறிந்த விஜய் தானாகவே முன்வந்து சிம்புவிற்கு உதவிக்கரம் நீட்ட கூடவே ஃபைனான்ஸ் பிரச்சினையையும் தீர்த்து வைத்திருக்கிறார். இதன் விளைவை தான் விஜயின் புலி பட ஆடியோ லாஞ்சில் டிஆர் பேசியதை நாம் பார்த்திருப்போம். இதன் காரணமாகவே வாரிசு படத்திற்காக சிம்பு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் பாடலை பாடி ஆடியும் கொடுத்திருக்கிறார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…