தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை அடுத்து மாவீரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை மண்டேலா பட புகழ் மடோனா அஸ்வின் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.
இதையும் படிங்க : ஜெயலலிதா மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு இருந்தது உண்மைதான்!.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்!..
இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அவர் போக யோகிபாபு, நடிகை சரிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயன் மாவீரன் படம் என்றதுமே அனைவரும் ஏற்கெனவே ரஜினி நடித்த மாவீரன் படத்தை நினைவு கூர்ந்தனர். அதற்காக ரஜினியின் மாவீரன் படத்தை தழுவி எடுக்கப்படுகிறதா என்றால் இல்லை. ஆனால் ரஜினியின் அந்த பட கெட்டப்பை சிவகார்த்திகேயன் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
ரஜினி நடித்த மாவீரன் படம் எதிர்பார்க்காத அளவில் தோல்வி படமாக அமைந்தது. அப்படி இருக்கையில் ஒரு பெரிய நடிகரின் தோல்வி படத்தின் தலைப்பை எப்படி இந்த படத்திற்கும் வைத்தார்கள் என்று ரசிகர்களிடமிருந்து ஏராளமான கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த மாதிரி மூடப்பழக்கங்களில் சிதைந்து போகக் கூடியவர் இல்லை மடோனா அஸ்வின். மேலும் ரஜினிக்கு மாவீரன் படம் தோல்வியை சந்தித்தாலும் சிவகார்த்திகேயன் மாவீரன் படம் கண்டிப்பாக வெற்றியை சந்திக்கும் என்ற நோக்கில் உழைத்து வருகின்றனர் என்று தெரிகிறது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…