Categories: Cinema News latest news

தர்மசங்கடமான நிலையில் ‘மாவீரன்’ படம்!..பொறுமை இழந்து பொங்கி எழுந்த சிவகார்த்திகேயன்!..

தமிழ் சினிமாவில் சில நாட்களாகவே சிவகார்த்திகேயனை பற்றி ஒரு பேச்சு அடிபட்டு கொண்டே இருக்கின்றது. எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இவர்கள் வரிசையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியிலும் சரி பிரபலங்கள் மத்தியிலும் சரி எளிமையாக பழக கூடிய நடிகராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பிரின்ஸ் படம் பெரும் தோல்வியை தழுவியது. அதுவும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் படத்தோடு மோதியது.

இதையும் படிங்க : வீட்டுல இருக்க பிடிக்காம ஜெமினி கணேசன் பண்ண காரியம்…அதற்கு உடந்தையாக இருந்த நடிகை!..

யாரும் எதிர்பார்க்காத தோல்வியை எட்டியது. இதனையடுத்து மண்டேலா புகழ் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் பட தோல்வி சிவகார்த்திகேயனை பெரிதும் பாதித்திருக்கிறது. அதன் காரணமாகவே இந்த மாவீரன் படத்தின் சில காட்சிகளில் திருத்தம் சொல்லிக் கொண்டு வந்தாராம். ஆனால் மடோனா அஸ்வினோ நான் என்ன கதையில் எழுதியிருக்கிறேனோ அதன் படி நடிங்கள் என்று சொல்ல சில பல கருத்து வேறுபாடுடன் படம் நின்று போயிருக்கிறதாம்.

கிட்டத்தட்ட ஒரு வார காலம் படப்பிடிப்பு நின்று விட்டதாம். மேலும் வாரிசு படத்தின் ரிலீஸ் நேரத்தில் மாவீரன் படத்தின் டிரெய்லரை தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த இந்த நேரத்தில் படப்பிடிப்பு நின்றது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini