×

அந்த நடிகையா?.. எனக்கு படமே வேண்டாம்!.. எஸ்கேப் ஆகிய பி.ஸ்ரீ.ராம்

 

நடிகர் சுஷாந்த் தற்கொலையை செய்து கொண்ட போது பாலிவுட் திரைப்பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியவர் கங்கணா ரணாவத். சிலர் திட்டமிட்டு புதிய படங்களிலிருந்து அவரை நீக்கியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூற, பாலிவுட் ரசிகர்களும் அவரின் கருத்தை ஆமோதித்தனர்.

மேலும், தொடர்ந்து பாலிவுட்டில் மாபியா கும்பல் செயல்படுவதாகவும், சினிமா நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக போதை மருந்து புலங்குவதாகவும் நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பை புகாரை கூறியிருந்தார். 

இந்நிலையில், அவர் நடிக்கும் ஒரு புதிய படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணிபுரியவிருந்தார். ஆனால், நடிகை கங்கணா ரணாவத் என்பதால் அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கங்கனா ரணாவத் என்பதால் வெளியேறிவிட்டேன். அடி மனதில் எனக்கு மனம் ஒப்பவில்லை. இதை தயாரிப்பாளர் தரப்பிடம் கூறிவிட்டேன். அவர்களும் புரிந்து கொண்டனர்.சில சமயம் நம் உணர்வு சொல்வதே சரியான ஒன்றாகும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் கூறியுள்ள கங்கனா ‘உங்களை போன்ற ஒரு ஜீனியஸுடன் வேலை செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.இது எனக்கு இழைப்பு. என்னுடன் பணிபுரிவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என எனக்கு தெரியவில்லை’ என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News