×

ஆடியோவை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறாரா இயக்குனர் – லாஜிக்கான கேள்வி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குனர் தேசிங்க் பெரியசாமியை ரஜினிகாந்த் பாராட்டினார்.

 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குனர் தேசிங்க் பெரியசாமியை ரஜினிகாந்த் பாராட்டினார்.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வெளியானது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் ஓடிடி பிளாட்பார்ம்களில் ரிலீஸான பின்னர் பரவலாகப் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டது.

இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வநதனர். இந்த படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்க் பெரியசாமியிடம் ரஜினி பாராட்டிப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டரில் ’அந்த ஆடியோ லீக்கானது சந்தோஷமான விஷயம் இல்லை’ எனக் கூறினார். ஆனால் உரையாடலை லீக் செய்ததே அந்த தேசிங்க் பெரியசாமிதான் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இருவர் தொலைபேசியில் பேசும்போது அதை யாராவது ஒருவர்தான் ஒலிப்பதிவு செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக அதை ரஜினி செய்திருக்க மாட்டார். அப்படியானால் அந்த இயக்குனர்தான் ஒலிப்பதிவு செய்து இதை வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் யாரோ லீக் செய்தது போல நல்ல பிள்ளையாக நடிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News