தி.முக அரசியல் கட்சியா... நாடக கம்பெனியா? - ஐபேக் ஐடியாவால் தலைகுனிவு

அரசியல்வாதிகளும், தலைவர்களும் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவுகளை தமிழ்மொழி கூட தெரியாத வடநாட்டவர்கள் எடுத்து வருகின்றனர்.
இதில் மற்றோர் கூத்தாக இப்போது `ஸ்டாலின் வர்றார் challange’ என்று நாடக கம்பெனி போல ஒரு மானாட மயிலாட நிகழ்ச்சியை பிரச்சார பாடம் மூலம் தொடங்கி உள்ளது திமுக.
`ஸ்டாலின் தான் வர்றார்,விடியல் தரப் போறாரு’ என்கிற பிரச்சாரப் பாடலுக்கு நடனமாடி தி.மு.க-வின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்காக சாம்பிளாக தி.மு.க வெளியிட்ட வீடியோவில், ஐபேக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சில நபர்களை வைத்தே ஒரு விடியோவை அவர்களே பதிவு செய்து உள்ளனர். ஒரு பாரம்பரிய திராவிடக் கட்சி இந்த அளவிற்கு தரம்கெட்டு ஒரு நாடக கம்பெனி போல செயல்படுவது அரசியல் நோக்கர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கட்சியின் தன்மானத்தை விட்டு இதுபோன்று தரம்தாழ்ந்த யுக்திகளைச் செயல்படுத்தி வருகிறது தி.முக என்று பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.