×

படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியானது "மாஸ்டர்" வீடியோவா? விவரம் இதோ!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊர் உலகமே வீட்டிற்குள் முடங்கியிருப்பதால் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் மார்ச் 31-க்கு மேல் எதிர்பார்க்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இணையத்தளங்களில் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதாக கூறி வீடியோ ஒன்று வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதுகுறித்து படக்குழு சார்ந்தவர்களிடம் விசாரித்து பார்க்கையில் இது மாஸ்டர் படத்தின் வீடியோ இல்லை என்பதை தெளிவுபடுத்தினர்.

 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News