Categories: Cinema News latest news

ராயன் படத்தோட கதை காப்பியா? பிரபலம் சொன்ன சீக்ரெட்… அட அந்த ஹீரோவோட படமா?

தனுஷ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா என 3 டைரக்டர்கள் மிரட்டும் படமாக ராயன் வந்துள்ளது. ஆனால் இந்தப் படத்தை எழுதி இயக்கி நடித்து இருப்பவர் தனுஷ். இந்தப் படத்தோட கதை இன்னொரு படத்தின் காப்பியா என தகவல்கள் வலம் வருகின்றன. என்னன்னு பார்ப்போமா…

ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்கும்போது நிறைய வன்முறைக் காட்சிகள் இருந்ததாம். தனுஷிடம் நிறைய வன்முறைக்காட்சிகளைக் கட் பண்ணினால் ‘யுஏ’ சான்றிதழ் கொடுக்கிறோம் என சொன்னார்களாம்.

அப்போது தயாரிப்பாளரிடம் இதைப் போய் தனுஷ் சொன்னாராம். இல்லை எதையும் கட் பண்ண வேண்டாம். ஏ சான்றிதழே இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்களாம். படத்துல தனுஷ்; போலீஸ் இன்பார்மரா இருக்கலாம்.

அவர் லோக்கல் ரவுடிகளோட சீக்ரெட்டை சொல்லிருக்கலாம். அதனால அவர் குடும்பத்துல ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துருக்கலாம். அதனால அவர் போலீசை வெறுத்து மீண்டும் ரவுடிகளிடமே போய் சேர்ந்துடுறாரு. அங்கு ஏதோ பிரச்சனை.

அதனால அங்குள்ளவர்களை எல்லாம் காலி பண்ணிவிட்டு மீண்டும் இன்பார்மர் தான்னு டுவிஸ்ட் வைச்சு படத்தை முடிக்கலாம். அவர் சிங்கமோ, சிறுத்தையாகவோ இருந்தால் போலீஸ்னு சொல்லலாம். அவர் ஓநாய் பற்றி சொல்றதால தான் இன்பார்மர்னு சொல்ல வேண்டியிருக்கு.

தனுஷ் போலீஸா நடிக்கவே இல்லை. விஜயோட போக்கிரி படம் அப்படியே பாண்டியன் படத்தோட காப்பியா இருக்கும். அந்தப் படம் டைரக்டா ‘போக்கிரி’யா மாறல. ‘பாண்டியன்’ படம் நல்லாருக்குன்னு தெலுங்குல எடுத்தாங்க. அது நல்லாருக்குன்னு அங்கிருந்து வந்தது தான் போக்கிரி.

USK

அப்படித்தான் ‘ராயன்’ படம். நவரச நாயகன் கார்த்திக் நடிச்ச ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ என்ற படம். அப்பவே கார்த்திக் போலீஸ் இன்பார்மரா இருப்பார். அவங்க நெருங்கிய சொந்தக்காரங்க கஞ்சா கடத்தல்ல கைதாகுறாங்க.

அப்ப லாக்கப் டெத்ல அவர் இறந்துடுறாரு. நான் இன்பார்மரா இருந்ததால தான இதெல்லாம் பண்ணுனீங்கன்னு கோபப்பட்டுட்டு ரவுடியிடம் போய் இணைகிறார். அங்க அவர் பெரிய ஆளாகிறார். அப்போது அவரது தங்கை மர்மகும்பலால் சாகடிக்கப்படுகிறார்.

அப்புறம் கேங்ஸ்டர் எல்லாத்தையும் அழித்துவிட்டு நார்மல் லைப்க்குள்ள வர்றாரு. ராயன் படமும் அதே கதையோட டெம்ப்ளேட் தான். ஆனால் அடிப்படையில் அது தான் இப்ப உள்ள காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருக்கலாம். திரைக்கதை வேணா மாறலாம்.
மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v