×

சிசிடிவி இல்லயா ? அதனால் என்ன கொறஞ்சு போச்சு ! ஆஹா மிஷ்கின் சொன்ன விளக்கம் !

சைக்கோ படத்தில் கொலை நடக்கும் இடங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.

 

சைக்கோ படத்தில் கொலை நடக்கும் இடங்களில் ஏன் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் பாராட்டையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்றுள்ளது. இதற்குக் காரணம் படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள். கண் தெரியாத நாயகன் பல கிலோ மீட்டர் தூரம் கார் ஓட்டுவது போன்ற காட்சிகள் நகைப்புக்குள்ளாகியுள்ளன.

அது போல கொலைகள் பட்ட பகலில் பொது இடங்களில் நடக்கும் போது அங்கு ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமராக்கள் இல்லையா? அதை வைத்து போலீஸ் துப்பு துலக்காதா என்கிற கேள்விகளை ரசிகர்களும் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றன. இதை வைத்து மிஷ்கினை பலரும் கேலி செய்ய அவருக்கு ஆதரவாகவும் பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை என்பது தொடர்பாக மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பப்பட்ட போது ’படத்துல சிசிடிவி இல்ல. அதனால் என்ன இப்போ? தியேட்டர்ல கொலை எப்படி பன்றான்னு பாக்காம? ஏன் சிசிடிவி ய தேடுறீங்க. ஒரு கொலைகாரன் கொலை செய்யும் போதோ அல்லது கடத்தும் போதோ அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அப்புறப்படுத்திட்டுதான் செய்வான். அதனாலதான் எடிட்டிங்ல சிசிடிவி கேமரா காட்சிகளை நீக்கிட்டோம். ஒவ்வொரு கொலைக்கும் சிசிடிவி காட்சிகள காட்டிட்டே இருந்தா உங்களுக்கே போரடிக்க ஆரம்பிச்சுடும். அதையெல்லாம் நீங்களேதான் புரிஞ்சுக்கணும். நான் சொன்ன கதை பாதி. மீதிக் கதையை நீங்கள்தான் புரிஞ்சுக்கணும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News