×

இது நியாயமா? இந்தியன் 2 விபத்து ; வாக்குறுதியை காற்றில் விட்ட லைக்கா..

சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் கிருஷ்னா(உதவி இயக்குனர்) சந்திரன்(கலை) மது(உதவி இயக்குனர்) ஆகிய 3 பேர் இறந்து போனார்கள். சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
 

இதையடுத்து, உயிர் இழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் 2 கோடி இழப்பீடு கொடுப்பதாக லைகா நிறுவனம் கடந்த பி்ப்ரவரி மாதம் அறிவித்தது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சமும், மீதி உள்ள தொகையை ஃபெப்சி யூனியன் மூலம் காயமடைந்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அந்த பணம் கொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. லைக்கா சுபாஷ்கரன் லண்டனில் இருப்பதால், கொரோனா ஊரடங்கு முடிந்து சென்னை வந்து, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி அந்த தொகையை கொடுப்பார் என லைக்கா தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தினருக்கு உதவித்தொகை கொஞ்சம் ஆறுதலாகவாவது இருந்திருக்கும். அதை கொடுக்காமல் இன்னும் இழுத்தடித்து வருவது சரியல்ல என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச துவங்கியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News