×

இளையராஜாவின் முதல் சொந்த ஸ்டூடியாவா இது... இந்தப் பின்னணி தெரியுமா உங்களுக்கு?
 

சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜா, தனது சொந்த ஸ்டூடியோவில் பட வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். 
 
 

இசைஞானி இளையராஜா 40 வருடங்களுக்கு மேலாக இருந்த பிரசாத் ஸ்டூடியோவை விட்டு சமீபத்தில் வெளியேறினார். இந்தநிலையில், தனது சொந்த செலவில் கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டூடியோவை அமைத்திருக்கிறார். அந்த ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் இசைப் பணிகளைத் தொடங்கினார் இளையராஜா.


ஸ்டூடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, ``சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க் கொண்டிருந்தன. அவ்வப்போது இந்திப் படங்களும் தயாராயின. இங்கிருந்த ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. அந்தச் சமயத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோவாக விஜயா வாஹினி ஸ்டுடியோ இருந்தது. அந்த ஸ்டுடியோவை இன்று காணோம். ஜெமினி ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோ, கோல்டன் ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, விஜயா கார்டன் எனப் பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை. இந்த வரிசையில் பிரசாத் ஸ்டுடியோவும் சேர வேண்டும் என்று வெளியே வந்துவிட்டேன்.

இளையராஜா, சொந்தமாக இப்போதுதான் ஸ்டூடியோ வாங்கியிருக்கிறார் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. இளையராஜா முதன்முதலாகத் தொடங்கிய ஸ்டூடியோ இதுவல்ல. ஏற்கனவே ஸ்டூடியோ தொடங்கி, அதில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளாலேயே தனியாக ஒரு இடத்தை செட் செய்யாமல் இருந்தார் இளையராஜா என்பது விவரமறிந்த சினிமா ரசிகர்களுக்குத் தெரியும்.


இளையராஜா தனக்கு சொந்தமாக ரெக்கார்டிங் தியேட்டரை கட்டமைத்துள்ளது இது முதல் முறை அல்ல. 19 90-களின் தொடக்கத்தில் பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டரை விட்டு வெளியேறி சில வருடங்கள் ஏ.வி.எம் ரெக்கார்டிங் தியேட்டரில் தனது இசைப் பணிகளை செய்து கொண்டிருந்தார். அங்கிருக்கும்போதே தனக்கென தனியாக ஸ்டூடியோ இருக்கவேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்து நடிகர் பாலாஜிக்கு சொந்தமான சுஜாதா டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கி அதை புதுப்பித்து, `இளையராஜா மியூஸிக் யுனிவர்சல்’ என்ற  பெயரில் அங்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். 


ஆனால், பலர் இப்போதுதான் இளையராஜா சொந்தமாக ஸ்டூடியோ வாங்கியிருக்கிறார் என்று நெகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா அங்கு பணியாற்றிய படங்களின் டைட்டில் கார்கள் கூட பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இளையராஜா, தனது சொந்த ரெக்கார்டிங் தியேட்டரை விட்டு விட்டு மீண்டும் ஏன் பிரசாத்  ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றார் என்று சந்தேகம் வரலாம் பலருக்கு. அதற்குக் காரணம் அன்றைய ஆளுங்கட்சி, இளையராஜா விதிமீறி கட்டியதாக அவரது ஸ்டூடியோவை இடித்துத் தள்ளியது. இந்தப் பின்னணி நிறைய பேருக்குத் தெரிந்திருந்தும், வசதியாக மறந்துவிட்டார்கள் போல என்று கமெண்டடிக்கிறார்கள் இசைஞானி ரசிகர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News