×

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு இந்த நிலைமையா ?– ரசிகர்கள் வருத்தம் !

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாரஸ்ட் கம்ப் மற்றும் டாவின்ஸி கோட் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்தவர் நடிகர் டாம் ஹாங்ஸ். இவரது நடிப்புக்காக இவருக்கு ஹாலிவுட் மட்டுமில்லாமல் உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இவர் அறிவித்த ஒரு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘நானும் என் மனைவியும் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததில் இருந்து சோர்வாக இருந்தோம். எங்களுக்கு சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான பரிசோதனைகளை மெற்கொண்டோம்.  அதில் எங்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் சிகிச்சை பெற்று வருகிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News