×

ரெய்னாவுக்கு பதில் இவரா? ஷேன் வாட்சனின் கணிப்பில் ரசிகர்கள் சந்தேகம்!

சி எஸ் கே அணியில் இருந்து ரெய்னா வெளியேறியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக முரளி விஜய்யை தேர்வு செய்தால் பொருத்தமாக இருக்கும் என வாட்ஸன் தெரிவித்துள்ளார்.

 

சி எஸ் கே அணியில் இருந்து ரெய்னா வெளியேறியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக முரளி விஜய்யை தேர்வு செய்தால் பொருத்தமாக இருக்கும் என வாட்ஸன் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் தளபதியான சுரேஷ் ரெய்னா அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இந்தியா திரும்பிவிட்டார். இது சி எஸ் கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். இதுவரை சிஎஸ்கே அணிக்காக தோனியை விட அதிக போட்டிகளில் விளையாடியவர் ரெய்னா.

இந்நிலையில் தொடர் தொடங்க இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் இப்போது ரெய்னாவுக்கு பதில் அணியில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதற்கு சி எஸ் கே அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷேன் வாட்சன் பதிலளித்துள்ளார். அதில் ‘ரெய்னாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆனாலும் முரள் விஜய்யை தேர்வு செய்தால் அது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான துபாய் மைதானங்களில் விஜய்யால் சிறப்பாக செயல்பட முடியும்.’ எனக் கூறியுள்ளார்.

முரளி விஜய் கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணிக்காக எடுக்கப்பட்டாலும் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. இந்நிலையில் வாட்சனின் கணிப்பு சரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News