×

3 படத்தில் லாஸ்லியாவுக்கு இவ்ளோ சம்பளமா? - எல்லாம் பிக்பாஸு!
 

 

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கோடு ஃபிரண்ட்ஷிப் என்கிற படத்திலும், ஆரியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.  தற்போது மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

losliya

இந்நிலையில், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.25 லட்சம் வரை அவர் சம்பளம் பெறுகிறாராம். எனவே 2 படங்களில் நடிக்க ரு.50 லட்சம் அவர் சம்பளமாக பெற்றுள்ளார்.  இவ்வளவு சம்பளம் தனக்கு தொடக்கத்திலேயே கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லையாம். ஆனால், பிக்பாஸ் மூலம் இவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளதால் தான் தயாரிப்பாளர்கள் லாஸ்லியாவுக்கு இவ்வளவு தொகையை சம்பளமாக கொடுக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News