×

உங்க இளமையின் ரகசியம் இது தானோ...? ரசிகர்களை வாய்பிளக்க வைத்த நதியா!

நடிகை நதியா 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்தின் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தார். சிறந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து, சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்த அவர் ராஜகுமாரன் திரைப்படத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.

 

அதையடுத்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவியின் இளமையான அம்மாவாக  எம். குமரன் s/o மஹாலக்ஷ்மி படத்தில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், அசின், ஜனகராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அம்மா மகனின் பாசம் நிறைந்த இப்படம் ஒட்டுமொத்த சினிமா பிரியர்களுக்கும் பிடித்துவிட்டது.

தற்போது 53 வயதாகும் நடிகை நதியா இன்னும் இளமை மாறாமல் அதே அழகில் அப்படியே இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அவரின் அழகிற்கான ரகசியம் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில்  காலை ஒர்க் அவுட் செய்த போட்டோக்களின் தொகுப்பை வெளியிட்டு “நல்ல ப்ரடக்ட்டிவிட்டியான நாளை, சில எளிய ஸ்ட்ரெச்களுடன் தொடங்குங்கள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். நதியாவின் இந்த ஃபிட்னெஸ் படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யமடையச் செய்ததுடன் இதுவல்லவோ அவரது இளமையின் ரகசியம் என கமெண்ட் அடுத்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News