×

 வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா...? நெபோட்டிசம் , குருபிசம் இங்கு ரெண்டுமே இருக்கு!

பாலிவுட்டில் சுஷாந்தின் தற்கொலை பல விவாதங்களை எழுப்பியுள்ளது. பாலிவுட்டில் இருக்கும் வாரிசு கலைஞர்களின் ஆதிக்கமே புதிதாக வருபவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிப்பதாகவும், அதன் மூலம் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகிய இருவரும் தங்களையும் இதுபோல சிலர் பணிபுரிய விடாமல் தடுத்ததாகக் கூறியது மீண்டும் விவாதத்தை எழுப்பியது.

 

அதை தொடர்ந்து தமிழ் மற்றும் பாலிவுட் ஆகிய இரு மொழி படங்களிலும் பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தன் சமூகவலைதள பக்கத்தில் ’தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????...’ என ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்ப்போது இயக்குனர் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ்,  நெபோட்டிசம்  இங்கேயும் இருக்கு. அதனை அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்...தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை மட்டும் ஆதரித்து மற்றவர்களின் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலத்தின் வாரிசே இப்படி கூறியிருப்பதால் யார் தான் அந்த நேபோட்டிசத்தையும், குரூப்பிசத்தையும் பின்பற்றுகிறார்கள் என மக்கள் குழம்பிபோயுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News