×

இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா ஹரிஸ் கல்யாண்? !.. கடுப்பான ரசிகர்கள்... 

 

பொறியாளன், பியார் பிரேமா காதல், தர்ம பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிஸ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 

அதேபோல், தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பிரியா பவானி ஷங்கர். இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரியா பாவனியுடன் காதல் ஏற்பட்டுள்ளது போல் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு டிவிட்டை ஹரிஸ் கல்யாண் பதிவிட்டிருந்தார். அதில் #HarishHeartsPriya, #LoveIsInTheAir என்கிற ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தியிருந்தார். 

இதற்கு ‘லாக்டவுன் முடியும் வரைக்கும் உன்னால் பொறுத்திருக்க முடியாதுல்ல.. மக்களிடம் நான் முதலில் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன்’ என பிரியா பவானி ஷங்கர் பதிவிட்டார்.இதற்கு ‘காத்திருக்க முடியாது. காத்திருக்க மாட்டேன். நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக நானே அறிவிப்பேன்’ என டிவிட் செய்துள்ளார்.

இதை பார்க்கும் போது இருவரும் காதலிக்கிறார்களா என சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால், அது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் புரமோஷன் என்பது தெரியவந்துள்ளது.இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை தெலுங்கு நடிகர் விஜயதேவரகொண்ட வெளியிடவுள்ளார் என ஹரிஷ் கல்யாண் டிவிட் செய்துள்ளார். 

இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா? நாங்க வேற என்னமோ நினைச்சோம் என பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News