×

இந்த நேரத்துல செய்யிற வேலையா இது? விமல் மற்றும் சூரிக்கு அபராதம்!

கொடைக்கானலில் உள்ள பேரிஜான் ஏரியில் மீன் பிடித்ததற்காக வனத்துறையில் விமல் மற்றும் சூரிக்கு அபராதம் விதித்துள்ளனர்.

 

கொடைக்கானலில் உள்ள பேரிஜான் ஏரியில் மீன் பிடித்ததற்காக வனத்துறையில் விமல் மற்றும் சூரிக்கு அபராதம் விதித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல சாதாரண விஷயங்களுக்குக் கூட இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாமே மக்களின் நன்மைக்காகதான் என்பதால் பொதுமக்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் பிரபலங்கள் என்பதாலேயே தங்களுக்கு அனைத்திலும் சிறப்பு சலுகை உண்டு என எண்ணிக்கொள்கின்றனர் சிலர்.

இந்நிலையில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் கொடைக்கானல் சென்று பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக வனத்துறை அவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News