Connect with us

Cinema News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

Venkat Prabhu: சமீப காலமாக கோலிவுட்டில் தோல்வியடையும்  படங்களுக்கு அப்படத்தின் இயக்குனர்கள் பேட்டியில் வந்து சமாளிப்பாக சில விஷயங்களை கூறி வருகின்றனர். அதையெல்லாம் தற்போது காமெடியாக இயக்குனர் வெங்கட் பிரபு கலாய்த்துருப்பது ஆச்சரியத்தைனை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட்டர்ஸ் ஆஃப் ஆல் தி டைம்.  இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீப காலமாகவே திரைப்படங்களின் ப்ரோமோஷனல் யூட்யூப் வீடியோக்கள் மற்றும் பேட்டிகள் மூலமாக நடைபெற்று வருகிறது. அப்பொழுது  இயக்குனர்கள் தங்களுடைய படங்களை பெரிய அளவில் பாராட்டி பேசுவார்கள்.

இதையும் படிங்க:முதலில் இப்படிதான் சொன்னார்… ஆனால் கடைசியில் எங்களுக்கே ஷாக்… வெங்கட் பிரபு சொன்ன அதிர்ச்சி தகவல்

அப்படித்தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் தேசிய விருது வாங்கும் என்ற அளவிற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருப்பார். ஆனால் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. பின்னர் அது குறித்து பேட்டி ஒன்றில், தான் சரியாக தான் படம் எடுத்திருந்தேன்.

ஆனால் எடிட்டிங் போது முக்கிய பிரபலங்கள் நடித்திருந்த படத்தின் பிரம்மாண்ட காட்சியின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதனாலே இன்னமும் படம் ஓடிடியில் கூட வெளியாகாமல் இருந்து வருகிறது. அதுபோலவே நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன லியோ திரைப்படத்திலும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

இதையும் படிங்க: விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?

அதை சமாளிக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த பிளாஷ் பேக் பொய்தான் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயங்களை கேலியாக வெங்கட் பிரபுவிடம், படம் ரிலீஸ் ஆனதும் பிளாஷ்பேக் பொய், ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது என எதுவும் காரணம் சொல்ல மாட்டீங்களே என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு, எந்த ஹார்ட் டிஸ்க்கும் தொலையவில்லை. சரியான நேரத்தில் எல்லா விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டருக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதுபோல எந்த பிளாஷ்பேக்கும் பொய்தான் எனவும் நான் கூற மாட்டேன் எனவும் சத்தியம் அடித்து கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top