Categories: Cinema News latest news

‘லியோ’ படத்தில் இவருக்கா அப்பாவா நடிக்கிறார்?.. வெளியான புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்..

பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படம். அந்த எதிர்பார்ப்பிறக் காரணமே லோகேஷ் கனகராஜ் தான். அவர் எடுத்த முதல் படங்களான மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் வெற்றி தான் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கும் காரணமாக இருக்கிறது.

vijay janani

அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் முன்பு வெளியான பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லையாதனால் லியோ படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் படத்தில் எக்கச்சக்க நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

vijay2

த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் போன்ற பல நடிகர்கள் நடிக்க படப்பிடிப்பு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பரப்பரப்பாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியாளரான ஜனனியும் லியோ படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதை நிரூபிக்கும் விதமாக இவர் அளித்த பேட்டியும் அமைந்தது.

vijay iyal

பிக்பாஸ் சீசன் 6ன் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் தான் ஜனனி. இவர் விஜய்க்கு மகளாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதை பற்றி அவரிடமே கேட்டதற்கு எதுவுமே சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் லியோ படத்தின் படக்குழு டீம் புகைப்படத்தை ஒரு சமயம் வெளியிட அதில் காமெடி நடிகர் அர்ஜூனின் 7 வயது மகளான இயல் உடன் நின்று கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ரேவதிக்கு பதில் இவரா நடிக்க வேண்டியது?.. மிஸ் பண்ண சோகத்தில் பிரபல பாடகி!.

அதைப் பார்த்த ரசிகர்கள் 7 வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறாரா? இல்ல 24 வயது மகளுக்கு அப்பாவாக நடிக்கிறாரா விஜய்? என்று குழம்பி போயிருக்கின்றனர். ஆனாலும் இந்தக் குழப்பத்திற்கு அக்டோபர் 19 ஆம் தேதி விடை தெரிந்து விடும் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini