×

800 படத்திலிருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி? - பரபரப்பு தகவல்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். 

இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. 

ஆனாலும், பாரதிராஜா, இயக்குனர் சேரன், சீனுராமசாமி மற்றும் பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.ஒருபக்கம் எதிர்பு, ஒரு பக்கம் ஆதரவும் விஜய் சேதுபதிக்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இவ்வளவு எதிர்ப்பை மீறி இப்படத்தில் நடிக்க வேண்டுமா என்கிற எண்ணம் விஜய்சேதுபதிக்கு ஏற்பட்டுள்ளதாம். எனவே, இப்படத்திலிருந்து விலகுவதாக விரைவில் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News