×

பாஜக-வை கலாய்க்கிறாரா விஜய் சேதுபதி? துக்ளக் தர்பார் படம் என்ன சொல்கிறது?

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்  விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு  கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு விதமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை குறித்து கிண்டல் செய்து கலாய்க்கும் விதத்தில் இருக்கும் என பேசப்படுகிறது.

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை அசத்திய நிலையில் தற்ப்போது இப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபனின் புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை சுமார் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News